Pages

Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts

Thursday, 9 May 2013

காப்பாற்ற வருவாய்

காதலா !..உன்னை நான் எப்படி
காணாமல் இருப்பேன்?..
இருதயம் இல்லாத கூட்டத்தின்
இரும்பு பிடியில் நான் ...
பாசம் இருப்பதுபோல்
பாசாங்கு செய்கிறார்கள் ...
பார்க்க கூடாதாம் உன்னை
பார்வை பிறகு எனக்கு எதற்கு ?..
விரல் பதிந்த கைப்பேசி அழுகிறது -என்
விரல்கள் வலுவிழந்ததை கண்டு ...
உறக்கமின்றி நான் தவிப்பது ..
உனக்குமட்டும் தெரியாதா என்ன ?...
காப்பாற்ற வருவாய் நீ ..
காதலை வாழ வைப்பாய்நீ ..
காலமெல்லாம் நம்பிக்கையில் ..
காத்திருக்கும் காதலி .....

Wednesday, 1 May 2013

நமக்குள் பிரிவு

நமக்குள் பிரிவினை ஏன் தெரியவில்லை 

பாசம் அன்பு மாறியதேன் புரியவில்லை 
உன் அன்பு கிடைக்க நான் கொடுத்துவைக்கவில்லை 
விலகி நீ  போனாலும் உன்னை என்றும் 
விரும்பியே இருப்பேன் அன்பே ..

வலி தீர வழி சொல்


உதட்டளவில்தான் உறவு வைத்தாய் 
உள்ளத்திலிருந்து ஏனோ விலக்கிவைத்தாய் 
உணர்ந்து கொண்ட போதோ !..
உயி ர் அறுந்து வீழ்ந்தேன் ..
பார்க்காதபோது பரிவுடன் இருந்தாய் ..
பார்த்தபின் ஏனோ பரிதவிக்கவிட்டாய் 
பார்த்து எதிர்பார்த்து பாதியானது தேகம் 
பாராமுகமாய் நீ இருப்பதால் 
வலிக்கிறதே என் நெஞ்சம் ..அந்த 
வலிதீர வழி ஒன்றை சொல் ...

Tuesday, 2 April 2013

காதல்


காணவில்லை

நெருங்கினாய் பார்வையால்
நிரப்பினாய் வார்த்தையால்
கொன்றாய் அன்பால்
புதைத்தாய் உன் உள்ளத்தில்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
காணவில்லையே என்னை ....


காதல் நாடகம்

நில்லாமல் நின்றாய்
பார்க்காமல் பார்த்தாய்
சொல்லாமல் சொன்னாய்
கொல்லாமல் கொன்றாய்
செல்லாமல் செல்கிறாய் -இதுதான்
காதல் நாடகமா?..

Tuesday, 26 March 2013

காதலி என்னை காதலி


வானம் என் கைக்கு எட்டும்
தூரம் வந்து விடும் ..
வெற்றியோ என் வாசலில்
காத்துகிடக்கும் ..
உலகமே என் காலடியில்
வீழ்ந்து கிடக்கும் ..
ஏணியே இல்லாமல் உயரம்
எனக்கு எட்டிவிடும் ..
ஐயோ !..நீ மட்டும் என் காதலை
ஏற்று கொண்டுவிட்டால் ....


காயவடு மறைய வில்லையே ...


தண்ணீரில் ஓடம் போகும் -என்

கண்ணீரில் ஓடம் போகுமோ ?..
காட்டாற்று வெள்ளத்தில் எல்லாம்
காணாமல் போகும் ..
காதல் பெருவெள்ளத்தில் -நான்
காணாமல் போனேனே ...
காதலை மட்டுமே நான் தந்தேன்
காயங்கள் மட்டுமே நீ தந்தாய் ...
காய்ந்து போனாலும் என்
காயவடு மறையவில்லையே ...

புரிகிறதா கொஞ்சம்


உன்னிடம் மயங்குகிறேன் 
உண்மையைத்தான் சொல்லுகிறேன் 
உயிரற்ற உடம்பாய் இருந்தேன் 
உயிரை ஊற்றினாய் என்னுள் ..
உரிமையாக்கிக்கொள்ள துடிக்கும் நெஞ்சம் 
உனக்கு அது புரிகிறதா கொஞ்சம் .



Monday, 18 March 2013

காத்திடு என் இறைவா !..


ஏக்கமும் ஏமாற்றமும் 
போதுமே ..என் இறைவா ...
என்னுள் செத்துவிட நான் விரும்பவில்லை 
சுவாசத்தை கொடுத்துவிடு என் இறைவா ..
அவளுக்குள் மூழ்கிட நான் விரும்பவில்லை 
மேலே தூக்கிவிடு என் இறைவா ...
நான் பிழைத்தால் உன்னால் தான் என் இறைவா ..
இனி ஒரு முறை ஏமாறாமல் காத்திடு என் இறைவா ...

எப்படி உரைப்பேன் என் அன்பை ?...


ஒரு நிமிடம் நீ பேசினால் ..
பறப்பேன் வானில் ..
இது ஏன் உனக்கு தெரியவில்லை ?..
என் இதயமொழி உனக்கு புரிகிறதா ?..
புரிந்துகொண்டு தான் நடிக்கிறாயா ?..
கனவில் வருவாய் என ..
தூக்கம் விழிக்காமல் காத்திருக்கிறேன் .
கனத்த மனதிற்கு ஆறுதல் 
உன் வார்த்தையில் ...
மனதோடு பேச வா அன்பே ...
வேறு எப்படித்தான் உரைப்பேன் 
என் அன்பை ...

ஏன் உணரமுடியவில்லை ?


என்ன நான் இன்னும் 
ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமோ ?..
உன்னுடன் பேச ...
உன்னை நான் அப்படியே ..
மறந்துவிட முடியாதே !...
உன் கண்ணசைவு எனக்கு புரிகிறது 
என் இதய துடிப்பை உன்னால் 
ஏன் உணரமுடியவில்லை ?....

ஹைக்கூ ...

தவிப்பு 

தூண்டில் போட்டாய் 
அன்பெனும் புழுவால் .....
சுவாசம் இன்றி தவிக்கின்றேன் 
தரையில் மீனாய் ......


தெய்வம் 

தேவதையே ....
நீயே !..என் தெய்வம் ...ஆம் ..
தெய்வம் பேசுவதில்லை 
உன்னைப்போல் ....


காதல் 

வினாக்கள் நிறைய எழும் ..
ஆனால் 
விடைதான் கிடைக்காது ...

Saturday, 9 March 2013

காப்பாற்றும் எண்ணம் இல்லையோ ?..

தூக்கம் இல்லை கண்ணே ..

உன் நினைவால் ..
தவறியே தூங்கினாலும்
கனவிலும் நீயே ...
உன்னால் கண்ணீரில்
கரைகின்றேன் ....
காப்பாற்றும் எண்ணம் இல்லையோ ?...

நிஜத்தை காண்பது எப்போது?...

நிஜத்தில் உன்னோடு
வாழ்ந்த போது ...
நிழலாய் என்னோடு இருப்பேன்
என்றாய் .....
உன் நிழலோடு மட்டுமே
வாழ்கின்றேன் இப்போது ..
உன் நிஜத்தை காண்பது எப்போது ?...



எவர்க்கும் கொடுத்துவிடாதே


மறக்கத்தான் நினைக்கிறேன்
உன்னை .....
நினைவலைகள் ஒய்வதாய்
இல்லை ......
நீயாக என்னிடம் பேசவும்
மாட்டாய் ...
நான் பேசும்போதும்
தவிர்ப்பாய் ....
உன் இதயத்தில் நான்
இல்லை ...என்று
சொல்லிவிட்டாலும்
பரவாயில்லை ....
சொல்லாமல் கொல்வதே
உன் வழக்கம் .
மனதை கசக்கி பிழியும் ..இந்த
வேதனை யை பெண்ணே ....
வேறு எவர்க்கும் கொடுத்துவிடாதே ....


Saturday, 15 December 2012

வாழும் என் உயிர்

மலையளவுகனம் சுமப்பது 
என்மனம்தானோ ?..
விழி மூட மறுப்பது 
உன்நினைவில் தானோ ?..
மனம்நிழலாய் தொடர்வது 
உன்னால் தானோ ?...
காதல் என்றால் வலி தானோ ?.--மனம் 
உன் கால் தடம் படிந்த மணல் தானோ ?..
நீ வந்தால் ,வாழ வைத்தால் 
வாழும் என் உயிர் தானோ ?..

போதை

மது வாடை அறியாதவன் 

தள்ளாடுகிறேன் ....

உன் நினைவால் ...

Wednesday, 12 December 2012

மீண்டும் வாழ்வோம் வா .

கடற்கரையில் நாம் பதித்த 

கால் தடம் மீது நடப்போமா ?..
மீண்டும் ...
நாம் சந்தித்த இடங்களில் 
சந்திப்போமா ?..
மீண்டும் ..
நாம் வாழ்ந்த வாழ்க்கையை 
வாழ்வோமா ?..
மீண்டும் ..
காற்றாய் நீ மாறிய பின்னும் 
கைகோர்க்க நினைக்குது நெஞ்சம் 
மீண்டும் வாழ்வோம் வா .....

Saturday, 8 December 2012

பறவை


சிறகில்லாமல் பறந்தேன் 
நானும் ...
உன்மனவானில் ...

தலைகீழ்


வௌவாலாய் மனம் 
உன்னை ப்பிடித்து தொங்க ...
என் உலகமே தலை கீழ் .

நினைவு


மனதைத் தொட்டு போனாய் 
அலைகளாய் ....
நினைவை விட்டுச் சென்றாய் 
நுரைகளாய் ....