Pages

Showing posts with label ஹைக்கூ[ Haiku ]. Show all posts
Showing posts with label ஹைக்கூ[ Haiku ]. Show all posts

Tuesday, 2 April 2013

ஹைக்கூ

இரைச்சல்

ரயில் ஓடும் தண்டவாளமாய் -உன்
நினைவுகள் ஓடும் மனதில் ..
ஒரே இரைச்சல் ...

காதல் பூ

உன் அன்பெனும் மழைச்சாரலால் ..
பூத்ததோ என் மனதில்
காதல் பூ ...

காதல் வாசம்

சந்தனகட்டையே உரசினாய் நீயும்
இந்த கல்மீது ...மணக்கின்றேன் நானும்
சந்தனமாய் .....


Saturday, 15 December 2012

போதை

மது வாடை அறியாதவன் 

தள்ளாடுகிறேன் ....

உன் நினைவால் ...

Saturday, 8 December 2012

பறவை


சிறகில்லாமல் பறந்தேன் 
நானும் ...
உன்மனவானில் ...

தலைகீழ்


வௌவாலாய் மனம் 
உன்னை ப்பிடித்து தொங்க ...
என் உலகமே தலை கீழ் .

நினைவு


மனதைத் தொட்டு போனாய் 
அலைகளாய் ....
நினைவை விட்டுச் சென்றாய் 
நுரைகளாய் ....

தரிசனம்


அழகே !அழகே !
அழுது வேண்டுகிறேன் ..
கிடைக்குமா உன் தரிசனம் ?..

Friday, 30 November 2012

வீணான அன்பு

நீ நிரம்பிவழிகிறாய் எனத் தெரிந்தும்

ஏன் ஊற்றினேன் ?

என் அன்பை ...


தேடி கொடு

நான் ..

தொலைந்து போகிறேன் சந்தோஷமாய்

தேடி நீ கொடுப்பாய் என ...

ஆயுள் கைதி

கண்களால் கைது ...

இதயசிறையில் அடைப்பு ...

நானும் ஆனேன் ஆயுள் கைதியாய் ...


Thursday, 22 November 2012

வலை

சிலந்திவலைக்குள்

சிக்கியது பூச்சி ...

ஐயோ !..உன் காதல்வலைக்குள்

நான் ...

தேடல்

என்னை காணவில்லை ...

தேடுகிறேன் ....

உன்னில் ....

Wednesday, 21 November 2012

புயல்

காதல்புயல் வீச ...

பாதிப்பு அதிகம்

என்மனதிற்கு ......


வலி

உதைத்தாய் வலித்தது நெஞ்சம் ..

உன் கால்களுக்கு வலிக்குமே என்று ....

காப்பாற்று

என்னில் உன்னை ஊற்றி

மூழ்கடிக்கிறாய்  ....

காப்பாற்று மூச்சு முட்டுகிறது ....

Sunday, 11 November 2012

காதல்

பனிக்கட்டியாய் நான்

உருக ...

என் எதிரே சூரியனாய்

நீ !...

சிரிப்பு

வானில் ...

மின்னல் கீற்று

எதிரில்

உந்தன் சிரிப்பு ...

கண்கள்

இது என்ன ?...

வெண்ணிற வானில்

கரும் நிலவுகள்

உன் கண்கள் ...

மழை

மனித இனமே !

உன் அவல நிலை கண்டு

அழுகிறதோ வானம் ?...

மின்வெட்டு

பறவை குஞ்சுகளே !

நாங்களும் பாக்கியசாலிகள்

உங்கள் படிப்பு காலையில் முடிவது போல்

எங்களுக்கும் ...

தீபாவளி

மன இருள் நீக்கி

மதி ஒளி தந்திட -வந்திடு

தீப ஒளித் திருநாளே !...