Pages

Showing posts with label Life. Show all posts
Showing posts with label Life. Show all posts

Thursday, 9 May 2013

பேய் என ஆன தாய்

தாயே!நீ ஏன் இப்படி
பேய் என ஆனாய் ?..
தரக்குறைவான வார்த்தைகள் பேசி ..
தரம் குறைந்து நிற்கிறாய் ...
உன்மீது நான் வைத்த நம்பிக்கை
உடைந்து தான் போய்விட்டது ....
காதல் செய்வது என்ன பெரும் பாவமோ ?..
காட்டு மிரண்டியாய் நடந்து கொள்கிறாய் ..
பாசத்தால் நிறைந்த என் மனம் --இன்று
பாரமாகி போனதே தாங்கமுடியவில்லை ..
எதிர் பார்க்கவில்லை தாயே !---நீ
எதிரி போல் என்னை பார்ப்பாய் என்று ..
இரட்டை வேடம் போடும் உன்னை
இப்பவும் மன்னிக்கிறேன் நீ தாய் என்பதால் ..
உண்மையை பேசு --தயவு செய்து
உன் உள்ளத்திலிருந்து பேசு .....



Wednesday, 1 May 2013

மகளே !என் அருமை மகளே!


மகளே !என் அருமை மகளே!
மலடி என ஒருவரும் அழைக்காவண்ணம் 
மகளாய் பிறந்தவளே!...
மகிழ்கின்றேன் உன்னில் ...
ஒரு மணி நேர வேதனையை 
ஒரு வினாடியில் மறந்தேன் ...
என்னுள் குடியிருந்த உயிரே ..
என்னை கட்டிக்கொண்டு 
என் கன்னத்தில் நீ இட்ட முத்தம் 
என்றுமே இனிக்குமே திகட்டாது ...
உன் மழலையில் மகிழ்ந்தேன் 
உன் அறிவில் வியந்தேன் 
உன் அன்பில் நனைந்தேன் 
உன் சாதனையில் பெருமிதமடைந்தேன் 
ஒரு சில வரிகளில் முடிந்திடுமோ?
ஒரு தாயின் பாசம் ..
ஒரு யுகம் கடந்து போனாலும் 
ஒரு அற்புதமாய் என்றும் நிற்கும் .

Tuesday, 2 April 2013

வீண்


மனநிறைவில்லா வாழ்க்கை
ஞானமில்லா பலம்
கடைபிடிக்காத ஒழுக்கம்
உழைக்காத உணவு
கைமாறு எதிர்பார்த்த உதவி
அடக்கமில்லா படிப்பு
ரசிக்கப்படாத அழகு
காட்டப்படாத அன்பு
பேசப்படாத நல்வார்த்தை
தொடர்பு இல்லாத நட்பு - இவை
எல்லாமே வீண் ...

Tuesday, 26 March 2013

காயவடு மறைய வில்லையே ...


தண்ணீரில் ஓடம் போகும் -என்

கண்ணீரில் ஓடம் போகுமோ ?..
காட்டாற்று வெள்ளத்தில் எல்லாம்
காணாமல் போகும் ..
காதல் பெருவெள்ளத்தில் -நான்
காணாமல் போனேனே ...
காதலை மட்டுமே நான் தந்தேன்
காயங்கள் மட்டுமே நீ தந்தாய் ...
காய்ந்து போனாலும் என்
காயவடு மறையவில்லையே ...

Monday, 18 March 2013

ஹைக்கூ ...

தவிப்பு 

தூண்டில் போட்டாய் 
அன்பெனும் புழுவால் .....
சுவாசம் இன்றி தவிக்கின்றேன் 
தரையில் மீனாய் ......


தெய்வம் 

தேவதையே ....
நீயே !..என் தெய்வம் ...ஆம் ..
தெய்வம் பேசுவதில்லை 
உன்னைப்போல் ....


காதல் 

வினாக்கள் நிறைய எழும் ..
ஆனால் 
விடைதான் கிடைக்காது ...

Saturday, 9 March 2013

இளமை

நேற்று பாலகன்
இன்று இளம்காளை
நாளை கிழவன்
இளமை தேயும்
முதுமை வரும்
கருமயிர் நிறம்மாறி
வெண்மையாகும் ....
நமது உயிர் இறப்பை
சந்திக்கும் ....
உடல் கீழே விழும்
அதற்கு முன் ....
உன் கடமைகளை
செய்து விடு ..
உணவை பிறரிடம்
பகிர்ந்து உண்டுவிடு ...
பாவக்கணக்கை
முடித்துவிடு ...
புண்ணியகணக்கை
கூட்டிவிடு .....




Sunday, 27 January 2013

செல்வம்


உயிர் போனால்
உன்னோடு எதுவும் வருவது இல்லை ..
காலன் வந்துவிட்டால்
காசு பயன்படுவதில்லை ...
கடல்மேல் செல்லும் கப்பல்
கவிழும் நேரம் உனக்கு தெரிவதில்லை ...
நிலையில்லா வாழ்விது என்றுமே
நிலைக்காது இது உனக்கு புரிவதில்லை ...
செல்வம் மட்டும் நிலைக்கும் என்று
செருக்குடன் இருப்பது ஏன் ?..
நிகரில்லா தர்மம் செய்து
நிரந்திர செல்வம் பெற்று கொள் ...

Saturday, 12 January 2013

மரணம்

உடலெனும் கூட்டை விட்டு 


உயிர் பறவை பறந்தது -

மரணம் ...

தரிசனம்


அன்பாலே உருகி

அகம் குளிர்ந்தால் கிடைக்குமே

அவன் [கடவுள்]தரிசனம் .

ஆனந்தம்



நீ தூக்கி வந்த சுமையை 
இறக்காமல் விடாது 
உன் ஆன்மா ....
நீ செய்த வினைகளின் 
பலனை புசிக்காமல் விடாது 
உன் உடல் ...
இன்பம் வரும் போது 
இறுமாப்பு கொள்கிறாய் ...
துன்பம் வரும் போது 
துவண்டு போகிறாய் ...
நீ இருட்டில் பாதை தேடி 
தவிக்கும் போது ...
ஒளியாய் வழி காட்டுபவன் 
இறைவன் .....
அவனை மனதில் இருத்தி 
அமைதியாய் வாழ 
முயற்சி செய் .....
ஆனந்தம் தேடிவரும் 
உன்னை ......

Tuesday, 1 January 2013

புத்தாண்டே வந்துவிடு

புத்தாண்டே வந்துவிடு

புத்துயிர் பெற்றுவிடு

துயரங்களை துடைத்துவிடு

இன்பங்களை தந்துவிடு

அன்பு எங்கும் பரவ செய்துவிடு

பெண்மையை மதிக்கும் பண்பை வளர்த்திடு

குற்றமற்றவர்கள் வாழும் நாடாக மாற்றிவிடு

அனைத்து வளமும் பெற்றதாய் இந்தியாவை ஆக்கிவிடு



Tuesday, 18 December 2012

அன்பான அத்தைக்கு கண்ணீர் அஞ்சலி


அத்தை மடி மெத்தையடி 
ஆடிவிளையாடம்மா ...---என்று 
எனக்கு தாலாட்டு பாடிய 
என் அத்தையே .....
இன்று உன் மீளா தூக்கத்திற்கு 
தாலாட்டு பாடியது யார் ?..
என் அன்னைமடி போதும் என 
பாட்டி யிடம் சென்றுவிட்டாயோ ?..
போதும் பட்ட அவஸ்த்தை என்று 
போகத்துணி ந்தாயோ ?...
எவ்வளவு தான் தத்துவம் பேசினாலும் 
என்மனம் தாங்க முடியாமல் தவிக்குதே !..
அன்பின் இந்த வலிமை யாருக்கு புரியும் ?..
மனதின் பாரத்தை இரக்க த்தெரியாமல் தவிக்கிறேன் 
இறைவனிடம் ஆறுதல் தேடுகின்றேன் ...
மரணம் என்ற ஒன்று 
மறுக்கமுடியாத து என்று 
உணர்கின்றேன் ...
அதனால் ...
இறைவனின் திருவடி நிழலில் ---உங்கள் 
ஆன்மா சாந்தியும் சமாதானமும் பெற 
பிராத்திக்கிறேன் .....

Friday, 30 November 2012

வாழ்க்கை தத்துவம்

ஒரு துளி இந்திரியம்

உன் பிறப்பு ...

சுவாசிக்க மறக்கும் ஒரு நொடி

உன் இறப்பு ...

இடைப்பட்ட வாழ்வில் தான் உள்ளது

உன் சிறப்பு ...


Monday, 5 November 2012

ஆதரவற்ற மகனின் கனவு

தாயே ! ...

எங்கு தான் போனாய் !...
என்னை தனியே
தவிக்க விட்டு ;

தெரிந்தே என்னை
தெருவில் விட்டாயோ ?...

ஏதோ ஒரு கயவனை நம்பி
மோசம் போனாயோ ?...

விருப்பமே இல்லாமல்
என்னை ஈன்றாயோ ?...

தவறி உன் வயிற்றில்
பிறந்தேன் என்று
தண்டனை தந்தாயோ ?...

மண்ணில் நான் விழும் முன்னே - நீ 
விண்ணுலகம் சென்றாயோ ?...

தெரிந்தே என்னை
தவற விட்டாயோ ?...

உனக்கு தெரியாமலேயே
தவற விட பட்டேனோ ?...


நீ இரக்கமுள்ளவளோ , இரக்கமற்றவளோ ;
அது தெரியாத எனக்கு ,
ஒரு பேராசை மட்டும் உண்டு.

என்றோ ,
ஒரு நாள்
உன்னை சந்திப்பேன்
என் மகன் நீயென - நீ
புகழும்படி உயர்வேன்

என் கனவு நனவாகுமா தாயே ?...

- சாந்தி பாலாஜி


Sunday, 4 November 2012


மெய்யே   பொய்தான் 


மெய்யே ( உடலே ) இங்கு பொய்தான் 

மெய்யே (  உண்மையே ) இன்று பொய்தான்

பணத்தை பார்க்கும் மனிதா !  

குணத்தை பார்ப்பவன் எங்கே ?

எழில் சிந்தும் அழகும் 

அழியப் போவது மெய்தான் 

அன்பை மேற்கொள்ளாமல் 

பண்பை இழக்கும் மனிதா !

உண்மையைதான் சொல்லுகிறேன் 

உணர்ந்ததைத்தான் சொல்லுகிறேன் 

சுகபோகத்தை அடைந்தாலும் 

சுடுகாடு நமக்கு நிச்சயம் 

வழி மாறிய பயணம் தான் 

விழி மூடிய தருணம் தான் 

பிரித்து வாழும் உலகு ,நீ !

சிரித்து வாழ பழகு .


- Shanthy Balaji