Pages

Sunday 4 November 2012


மெய்யே   பொய்தான் 


மெய்யே ( உடலே ) இங்கு பொய்தான் 

மெய்யே (  உண்மையே ) இன்று பொய்தான்

பணத்தை பார்க்கும் மனிதா !  

குணத்தை பார்ப்பவன் எங்கே ?

எழில் சிந்தும் அழகும் 

அழியப் போவது மெய்தான் 

அன்பை மேற்கொள்ளாமல் 

பண்பை இழக்கும் மனிதா !

உண்மையைதான் சொல்லுகிறேன் 

உணர்ந்ததைத்தான் சொல்லுகிறேன் 

சுகபோகத்தை அடைந்தாலும் 

சுடுகாடு நமக்கு நிச்சயம் 

வழி மாறிய பயணம் தான் 

விழி மூடிய தருணம் தான் 

பிரித்து வாழும் உலகு ,நீ !

சிரித்து வாழ பழகு .


- Shanthy Balaji 


2 comments:

  1. ”இன்னாது அம்ம இவ்வுலகு,
    இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே”-
    எனும் சங்கக் காலக் கவிஞரின் தொடர்ச்சிதான்
    உங்கள் உணர்வலைகள். தொடர்ந்து எழுதுங்கள்.
    வணக்கம்.
    நா.முத்து நிலவன்,
    புதுக்கோட்டை -622004.
    http://valarumkavithai.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.
      எனக்கு தமிழ் புலமை அதிகம் இல்லை என்றாலும் , தமிழ் ஆர்வம் உண்டு. அதன் விளைவே இந்த மழலை முயற்சி.
      தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுத முயலுவேன்.

      Delete