Pages

Tuesday, 18 December 2012

அன்பான அத்தைக்கு கண்ணீர் அஞ்சலி


அத்தை மடி மெத்தையடி 
ஆடிவிளையாடம்மா ...---என்று 
எனக்கு தாலாட்டு பாடிய 
என் அத்தையே .....
இன்று உன் மீளா தூக்கத்திற்கு 
தாலாட்டு பாடியது யார் ?..
என் அன்னைமடி போதும் என 
பாட்டி யிடம் சென்றுவிட்டாயோ ?..
போதும் பட்ட அவஸ்த்தை என்று 
போகத்துணி ந்தாயோ ?...
எவ்வளவு தான் தத்துவம் பேசினாலும் 
என்மனம் தாங்க முடியாமல் தவிக்குதே !..
அன்பின் இந்த வலிமை யாருக்கு புரியும் ?..
மனதின் பாரத்தை இரக்க த்தெரியாமல் தவிக்கிறேன் 
இறைவனிடம் ஆறுதல் தேடுகின்றேன் ...
மரணம் என்ற ஒன்று 
மறுக்கமுடியாத து என்று 
உணர்கின்றேன் ...
அதனால் ...
இறைவனின் திருவடி நிழலில் ---உங்கள் 
ஆன்மா சாந்தியும் சமாதானமும் பெற 
பிராத்திக்கிறேன் .....

Saturday, 15 December 2012

வாழும் என் உயிர்

மலையளவுகனம் சுமப்பது 
என்மனம்தானோ ?..
விழி மூட மறுப்பது 
உன்நினைவில் தானோ ?..
மனம்நிழலாய் தொடர்வது 
உன்னால் தானோ ?...
காதல் என்றால் வலி தானோ ?.--மனம் 
உன் கால் தடம் படிந்த மணல் தானோ ?..
நீ வந்தால் ,வாழ வைத்தால் 
வாழும் என் உயிர் தானோ ?..

போதை

மது வாடை அறியாதவன் 

தள்ளாடுகிறேன் ....

உன் நினைவால் ...

Wednesday, 12 December 2012

மீண்டும் வாழ்வோம் வா .

கடற்கரையில் நாம் பதித்த 

கால் தடம் மீது நடப்போமா ?..
மீண்டும் ...
நாம் சந்தித்த இடங்களில் 
சந்திப்போமா ?..
மீண்டும் ..
நாம் வாழ்ந்த வாழ்க்கையை 
வாழ்வோமா ?..
மீண்டும் ..
காற்றாய் நீ மாறிய பின்னும் 
கைகோர்க்க நினைக்குது நெஞ்சம் 
மீண்டும் வாழ்வோம் வா .....

Saturday, 8 December 2012

பறவை


சிறகில்லாமல் பறந்தேன் 
நானும் ...
உன்மனவானில் ...

தலைகீழ்


வௌவாலாய் மனம் 
உன்னை ப்பிடித்து தொங்க ...
என் உலகமே தலை கீழ் .

நினைவு


மனதைத் தொட்டு போனாய் 
அலைகளாய் ....
நினைவை விட்டுச் சென்றாய் 
நுரைகளாய் ....

தரிசனம்


அழகே !அழகே !
அழுது வேண்டுகிறேன் ..
கிடைக்குமா உன் தரிசனம் ?..

Friday, 30 November 2012

வீணான அன்பு

நீ நிரம்பிவழிகிறாய் எனத் தெரிந்தும்

ஏன் ஊற்றினேன் ?

என் அன்பை ...


தேடி கொடு

நான் ..

தொலைந்து போகிறேன் சந்தோஷமாய்

தேடி நீ கொடுப்பாய் என ...

ஆயுள் கைதி

கண்களால் கைது ...

இதயசிறையில் அடைப்பு ...

நானும் ஆனேன் ஆயுள் கைதியாய் ...


வாழ்க்கை தத்துவம்

ஒரு துளி இந்திரியம்

உன் பிறப்பு ...

சுவாசிக்க மறக்கும் ஒரு நொடி

உன் இறப்பு ...

இடைப்பட்ட வாழ்வில் தான் உள்ளது

உன் சிறப்பு ...


Thursday, 22 November 2012

தூது

காற்றில் நீ !அனுப்பிய ..

தூது .....

வந்து சேரவில்லை

இன்னும் ...

புயலென வரும்

என நினைத்தேன் ....

பூந்தென்றலாய் கூட

வரவில்லையே ..ஏன் ?..

அனுப்பத்தான் மறந்தாயோ ?...

இல்லை....

என்னையே மறந்தாயோ ?...

வலை

சிலந்திவலைக்குள்

சிக்கியது பூச்சி ...

ஐயோ !..உன் காதல்வலைக்குள்

நான் ...

தேடல்

என்னை காணவில்லை ...

தேடுகிறேன் ....

உன்னில் ....

Wednesday, 21 November 2012

புயல்

காதல்புயல் வீச ...

பாதிப்பு அதிகம்

என்மனதிற்கு ......


வலி

உதைத்தாய் வலித்தது நெஞ்சம் ..

உன் கால்களுக்கு வலிக்குமே என்று ....

காப்பாற்று

என்னில் உன்னை ஊற்றி

மூழ்கடிக்கிறாய்  ....

காப்பாற்று மூச்சு முட்டுகிறது ....

Tuesday, 13 November 2012

பட்டாசு காதல்

உன்னைப்பார்த்து என் மனசு

மத்தாப்பு கொளுத்த ......

உன் தாயோ ..

சுருசுருவர்த்தியாய் ..

சுனுங்க ....

உன் தந்தையோ ...

லட்சுமிவெடியாய்

வெடிக்க .....

உன் அண்ணனோ ...

சரவெடியாய்

சத்தமிட ...

உன் மனமோ ...

சங்குசக்கரமாய்

சுழல ...

என் மனமோ ..

ராக்கெட்டில்

பறக்க ...

கடைசியில் எல்லாமே கனவாக ..

புஸ்வானமான து ..

என் காதல் ....

Sunday, 11 November 2012

காதல்

பனிக்கட்டியாய் நான்

உருக ...

என் எதிரே சூரியனாய்

நீ !...

சிரிப்பு

வானில் ...

மின்னல் கீற்று

எதிரில்

உந்தன் சிரிப்பு ...

கண்கள்

இது என்ன ?...

வெண்ணிற வானில்

கரும் நிலவுகள்

உன் கண்கள் ...

மழை

மனித இனமே !

உன் அவல நிலை கண்டு

அழுகிறதோ வானம் ?...

மின்வெட்டு

பறவை குஞ்சுகளே !

நாங்களும் பாக்கியசாலிகள்

உங்கள் படிப்பு காலையில் முடிவது போல்

எங்களுக்கும் ...

தீபாவளி

மன இருள் நீக்கி

மதி ஒளி தந்திட -வந்திடு

தீப ஒளித் திருநாளே !...

Friday, 9 November 2012

ஒன்று மட்டும் தெரியும் !..

நான் ..

அலைப்பேசியில்

அனுப்பும் ...

குறுந்தகவல்களை

நீ .....

பார்க்கிறாயா ?.....

படிக்கிறாயா ?...

சிரிக்கிறாயா ?....

ரசிக்கிறாயா ?....

கோபிக்கிறாயா ?...

எரிச்சலாகிறாயா ?....

எதுவுமே எனக்கு

தெரியாது ?.....

ஒன்று மட்டும் தெரியும் !..

என் எண்ணங்கள் எழுத்துக்களை

பதிவு செய்ய ....

அவை உன் இதயத்தை தொடுகிறதோ ?....

இல்லையோ ?.....

உன் அலைப்பேசியையாவது

தொட்டு விடுகிறதே !.......

மௌன மொழி

நீ ஏன் ?..ஒரு வார்த்தைக் கூ ட

பேசாமல் மௌனத்தால்

என்னை கொல்கிறாய் ?...

காற்றோடு மலர் பேச

வாசமாய் ..........

காற்றோடு கடல் பேச

அலைகளாய் ........

என்னோடு நீ பேச நான்

என்னாவேனோ ?....

சிதைந்த என் மனம் - உன்

சிரிப்பால் , தன் ....

சிறகை விரிக்கும் .......

அது தெரிந்தும் ஏன் ?...

இந்த மௌனம் .....

தேவதையே !..வந்து பேசி விடு !..

எனக்கு ஒரு வாழ்வை தந்து விடு !....

Monday, 5 November 2012

ஆதரவற்ற மகனின் கனவு

தாயே ! ...

எங்கு தான் போனாய் !...
என்னை தனியே
தவிக்க விட்டு ;

தெரிந்தே என்னை
தெருவில் விட்டாயோ ?...

ஏதோ ஒரு கயவனை நம்பி
மோசம் போனாயோ ?...

விருப்பமே இல்லாமல்
என்னை ஈன்றாயோ ?...

தவறி உன் வயிற்றில்
பிறந்தேன் என்று
தண்டனை தந்தாயோ ?...

மண்ணில் நான் விழும் முன்னே - நீ 
விண்ணுலகம் சென்றாயோ ?...

தெரிந்தே என்னை
தவற விட்டாயோ ?...

உனக்கு தெரியாமலேயே
தவற விட பட்டேனோ ?...


நீ இரக்கமுள்ளவளோ , இரக்கமற்றவளோ ;
அது தெரியாத எனக்கு ,
ஒரு பேராசை மட்டும் உண்டு.

என்றோ ,
ஒரு நாள்
உன்னை சந்திப்பேன்
என் மகன் நீயென - நீ
புகழும்படி உயர்வேன்

என் கனவு நனவாகுமா தாயே ?...

- சாந்தி பாலாஜி


ஹைக்கூ கவிதை - பக்குவம்


காலச்சிற்பி ,

அனுபவ உளியால் ,

என்னை செதுக்க ...

நானும் உருவானேன் , 

பக்குவபட்ட சிலையாய் !...




தோழியே உனக்காக ,


தோழியே உனக்காக,

  மீண்டும் பூத்த உன் நட்பால்  
மலர்ந்தது இந்த கவிதை மடல்... 
கல்லூரியின் இறுதிநாள்  
புகைப்படத்தில்  
நீயும் நானும்-சிரிப்பில் 
மனம் கனத்தது  
ன்று ரவு  
னி .... 
என்று காண்பேன்  
உன்னை........ 
இருபது ஆண்டுகள் தவம்.,  
இறைவன் கருணை 
இனியவள் உன்  
ந்திப்பு......  
நான்  
உனக்கு நெருக்கமானவள் இல்லை.,  
உன் இதயத்திற்கு 
நெருக்மானள் . 
பூ போல மலர்ந்த முகம் 
பால் போல மனம் 
பிள்ளை போல பழகும் விதம்  
கர்வமே இல்லா உன் ளிமை  
சொல்லிகொண்டே போவேன் 
உன்னை ற்றி...... 
ன்னாளில்  
உன்னை நெருங்க விருப்பம்  
ஆனால் மனதில் ஏனோ? 
க்ம்..... 
நீயே.. 
வந்தாய்... பேசினாய்... 
ரகசியம் கூ சொன்னாய் 
என்னிடம்.... 
அப்போதும்.. 
இப்போதும்... 
என் ந்தோசம் நீ.. 
சிகில்லாமல்  
ந்தோ வானில் பறந்தேன். 
உன் நட்பு வட்டாரம் பெரிது  
அதில் ஆச்சரியம் இல்லை 
அந்த வட்டத்துக்குள் சதுரமாய் நான் 
ஆச்சரியம்... 
பெண்ணுக்கே உரிய கடமைகள் ... 
அலுவலில் ஏற்படும் பணி சுமை... 
குடும்பத்தில் இருக்கும் பொறுப்பு... 
என  
ஓயாது உழைக்கும் நீ நடுவே  
என்னையும் நினைக்கிறாய் அது போதும். 
சந்தோஷமாய் நீ வாழ வேண்டும் 
உன் நலன் விரும்பும் - உன் சிநேகிதி. 

- Shanthi Balaji


Sunday, 4 November 2012


மெய்யே   பொய்தான் 


மெய்யே ( உடலே ) இங்கு பொய்தான் 

மெய்யே (  உண்மையே ) இன்று பொய்தான்

பணத்தை பார்க்கும் மனிதா !  

குணத்தை பார்ப்பவன் எங்கே ?

எழில் சிந்தும் அழகும் 

அழியப் போவது மெய்தான் 

அன்பை மேற்கொள்ளாமல் 

பண்பை இழக்கும் மனிதா !

உண்மையைதான் சொல்லுகிறேன் 

உணர்ந்ததைத்தான் சொல்லுகிறேன் 

சுகபோகத்தை அடைந்தாலும் 

சுடுகாடு நமக்கு நிச்சயம் 

வழி மாறிய பயணம் தான் 

விழி மூடிய தருணம் தான் 

பிரித்து வாழும் உலகு ,நீ !

சிரித்து வாழ பழகு .


- Shanthy Balaji