Pages

Sunday, 27 January 2013

செல்வம்


உயிர் போனால்
உன்னோடு எதுவும் வருவது இல்லை ..
காலன் வந்துவிட்டால்
காசு பயன்படுவதில்லை ...
கடல்மேல் செல்லும் கப்பல்
கவிழும் நேரம் உனக்கு தெரிவதில்லை ...
நிலையில்லா வாழ்விது என்றுமே
நிலைக்காது இது உனக்கு புரிவதில்லை ...
செல்வம் மட்டும் நிலைக்கும் என்று
செருக்குடன் இருப்பது ஏன் ?..
நிகரில்லா தர்மம் செய்து
நிரந்திர செல்வம் பெற்று கொள் ...

Saturday, 12 January 2013

மரணம்

உடலெனும் கூட்டை விட்டு 


உயிர் பறவை பறந்தது -

மரணம் ...

வான் சிறப்பு



மழையாலே 

மரம் வளரும் ...

மரத்தாலே 

மழை பெய்யும் ...

தரிசனம்


அன்பாலே உருகி

அகம் குளிர்ந்தால் கிடைக்குமே

அவன் [கடவுள்]தரிசனம் .

ஆனந்தம்



நீ தூக்கி வந்த சுமையை 
இறக்காமல் விடாது 
உன் ஆன்மா ....
நீ செய்த வினைகளின் 
பலனை புசிக்காமல் விடாது 
உன் உடல் ...
இன்பம் வரும் போது 
இறுமாப்பு கொள்கிறாய் ...
துன்பம் வரும் போது 
துவண்டு போகிறாய் ...
நீ இருட்டில் பாதை தேடி 
தவிக்கும் போது ...
ஒளியாய் வழி காட்டுபவன் 
இறைவன் .....
அவனை மனதில் இருத்தி 
அமைதியாய் வாழ 
முயற்சி செய் .....
ஆனந்தம் தேடிவரும் 
உன்னை ......

Tuesday, 1 January 2013

புத்தாண்டே வந்துவிடு

புத்தாண்டே வந்துவிடு

புத்துயிர் பெற்றுவிடு

துயரங்களை துடைத்துவிடு

இன்பங்களை தந்துவிடு

அன்பு எங்கும் பரவ செய்துவிடு

பெண்மையை மதிக்கும் பண்பை வளர்த்திடு

குற்றமற்றவர்கள் வாழும் நாடாக மாற்றிவிடு

அனைத்து வளமும் பெற்றதாய் இந்தியாவை ஆக்கிவிடு